தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன. கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கள் ஆகின. முதுகுன்றம் – விருத்தாசலம் ஆனது. மரைக்காடு – வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது. சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வட மொழிப்பெயர்களை நீக்கி தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப்பெற்றது. குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.
நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன. ‘அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே’ என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம். நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்.
பெயர்கள் | பாலினம் |
சேரன் செங்குட்டுவன் | ஆண் |
நாராயணன் | ஆண் |
புவனாஸ்ரீ | பெண் |
ரூபதன் | ஆண் |
அகண்டன் | ஆண் |
அகத்தியன் | ஆண் |
அகமகிழன் | ஆண் |
அகமுகிலன் | ஆண் |
அகமுடைநம்பி | ஆண் |
அகமேந்தி | பெண் |
அகரன் | ஆண் |
அகரமுதல்வன் | ஆண் |
அகவன் | ஆண் |
அகவழகன் | ஆண் |
அகிலங்கடந்தான் | ஆண் |
அகிலன் | ஆண் |
அகிலாண்டேஸ்வரி | பெண் |
அகில் | ஆண் |
அங்கணன் | ஆண் |
அங்கயர்க்கண்ணி | பெண் |
அசோகன் | ஆண் |
அஞ்சடையன் | ஆண் |
அஞ்சனமழகியபிள்ளை | ஆண் |
அஞ்சனவண்ணன் | ஆண் |
அஞ்செழுத்தன் | ஆண் |
அஞ்சைக்களத்தப்பன் | ஆண் |
அஞ்சையன் | ஆண் |
அஞ்சையப்பன் | ஆண் |
அடங்கக்கொள்வான் | ஆண் |
அடர்ச்சடையன் | ஆண் |
அடலேறு | ஆண் |
அடலேற்றன் | ஆண் |
அடல்எழிலன் | ஆண் |
அடல்விடைப்பாகன் | ஆண் |
அடல்விடையான் | ஆண் |
அடிகளாசிரியன் | ஆண் |
அடியார்க்கடியான் | ஆண் |
அடியார்க்கினியான் | ஆண் |
அடியார்க்குநல்லான் | ஆண் |
அடைக்கலநம்பி | ஆண் |
அடைக்கலநாதன் | ஆண் |
அடைக்கலமணி | ஆண் |
அடைக்கலமுத்து | ஆண் |
அடைக்கலம்காத்தான் | ஆண் |
அடைவார்க்கமுதன் | ஆண் |
அடைவோர்க்கினியன் | ஆண் |
அட்டமூர்த்தி | ஆண் |
அணியன் | ஆண் |
அன்பழகி | பெண் |
அன்பழகு | ஆண் |
அன்பழகு | பெண் |
அன்பானந்தன் | ஆண் |
அன்பாழளன் | ஆண் |
அன்பினியன் | ஆண் |
அன்பிற்கரசு | ஆண் |
அன்பு | ஆண் |
அன்பு | பெண் |
அன்புக்கனி | ஆண் |
அன்புக்கரசன் | ஆண் |
அன்புசிவம் | ஆண் |
அன்புச்செல்வன் | ஆண் |
அன்புச்செழியன் | ஆண் |
அன்புடைநம்பி | ஆண் |
அன்புத்தம்பி | ஆண் |
அன்புநம்பி | ஆண் |
அன்புநிலவன் | ஆண் |
அன்புமணி | ஆண் |
அன்புமலர் | பெண் |
அன்புமுத்து | ஆண் |
அன்புமுருகன் | ஆண் |
அன்புவள்ளி | பெண் |
அன்புவாணன் | ஆண் | >
தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாகப் பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அருச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும். நிரோஜன் நிரோஜி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள்.
தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாகப் பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அருச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும். நிரோஜன் நிரோஜி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள். தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட,ண ற,ண,ன,ர,ல,ழ,ள என்ற வரிசை எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள். தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.
Copyright © 2023 | Powered by Born Baby Names